ஆளுமை:கௌரி, அனந்தன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:31, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கௌரி, அனந்தன்
தந்தை நித்தியானந்தம்
தாய் ரஞ்சிதமலர்
பிறப்பு 1981.04.10
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கௌரி, அனந்தன் (1981.04.10 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை நித்தியானந்தம்; தாய் ரஞ்சிதமலர். இவர் யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்று, யுத்த இடப்பெயர்வுகள் காரணமாக மடு தற்காலிக பாடசாலை முதற்கொண்டு பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம், வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகம் மற்றும் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர்மடம் போன்ற பல்வேறு பாடசாலைகளில் தனது கல்வியினை மேற்கொண்டுள்ளார். தனது பட்டப்படிப்பினைக் கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் மேற்கொண்டார். இவர் கொழும்புப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க்ஸ், ஹவ்லட் பக்கார்ட் உட்பட பல்வேறு நிறுவனங்களில் தகவல் தொழினுட்பத்துறையில் சேவையாற்றியுள்ளார்.

2015 இல் கொழும்பு தமிழ் சங்கம் வெளியிடப்பட்ட “கனவுகளைத் தேடி” என்ற நாவலின் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். 2016 இல் “பெயரிலி” என்ற நாவலை இந்தியாவில் வெளியிட்டார். வெறும் கதை சொல்லிகளாக இன்றி, சமுதாய கட்டமைப்புகள் மீது காத்திரமான விமர்சனங்களையும் மாறுபட்ட பார்வைகளையும் முன்வைத்து எழுதப்படும் இவரது நாவல்களில், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலன்களுக்காகவும் தமது வாழ்க்கையின் பெரும் பகுதியினை செலவிட்ட ஈழத்து மாந்தர்களையே பிரதான கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்படுவது சிறப்பம்சமாகும்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கௌரி,_அனந்தன்&oldid=315603" இருந்து மீள்விக்கப்பட்டது