ஆளுமை:பத்தினிப்பிள்ளை, வல்லிபுரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:30, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பத்தினிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்தினிப்பிள்ளை, வல்லிபுரம்
தந்தை -
தாய் -
பிறப்பு 1936.02.25
இறப்பு -
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்தினிப்பிள்ளை, வல்லிபுரம் (1936.02.25) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழ்ப் பண்டிதரும் சைவப்புலவருமான இவருக்கு பண்டிதர் க. வீரகத்தி, செல்வி கந்தப்பு, வித்துவான் கணபதிப்பிள்ளை ஆகியோரே இலக்கிய வழிகாட்டிகளாக உள்ளனர்.முஸ்லிம் மகா வித்தியாலயம், துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், ஞானசாரியார் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

கூட்டுறவு போட்டிகள், மற்றும் கரவெட்டி பிரதேச மட்ட கலை இலக்கிய போட்டிகளில் இவர் பங்கு பற்றி வெற்றி பெற்றுள்ளார். இவரது கலைச்சேவையை பாராட்டி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தால் மகளிர் திலகம் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.