ஆளுமை:மிஷாந்தி, செல்வராஜா
பெயர் | மிஷாந்தி |
தந்தை | செல்வராஜா |
தாய் | கோமலா |
பிறப்பு | 1979.06.28 |
இறப்பு | - |
ஊர் | அரியாலை |
வகை | எழுத்தாள்ர், ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மிஷாந்தி, செல்வராஜா (1979.06.28) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் கோமலா. இவர் தனது ஆரம்பக் கல்வியை அரியாலை ஶ்ரீ கலைமகள் முன்பள்ளியில் பயின்றதோடு பின்னர் யாழ்ப்பாணம் திருக்குடுப கன்னியர் மடத்திலும், யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றுள்ளார்.
தமிழில் கலைமாணி, முதுகலைமாணி பட்டம் பெற்றுள்ள இவர் முன்பள்ளி ஆசிரியையாக அரியாலை ஶ்ரீ கலைமகள் முன்பள்ளியிலும், மானிப்பாய் பிறிட்டிஷ் முன்பள்ளியிலும் கடமையாற்றியுள்ளார். மேலும் சுகாதார அமைச்சின் செய்திமடல் ஆசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார். கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற இவரது ஆக்கங்கள் உதயன், வலம்புரி, தினக்குரல் போன்ற செய்திப் பத்திரிகைகளிலும் வெளிவருகின்றன. அரியாலை ஶ்ரீ கலைமகள் மாதர்சங்க தலைவியாகவும், யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் உப தலைவராகவும், அரியாலை சிக்கன கடன் கூட்டுறவு சங்க செயலாளராகவும் தற்சமயம் இவர் திகழ்ந்து வருகின்றார்.
இவரது மூன்றாம் முத்தம் என்ற குறுநாவலும், காகிதங்கள் பேசுதடி என்ற கவிதைத் தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. இவரது படைப்பாற்றலுக்காக இதுவரை பல சான்றிதழ்களையும், பரிசில்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.