ஆளுமை:கிருஷாந்தி, இரவீந்திரா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:22, 2 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிருஷாந்தி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷாந்தி, இரவீந்திரா
தந்தை -
தாய் -
பிறப்பு 1954.10.25
இறப்பு -
ஊர் சுன்னாகம்
வகை நடனக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷாந்தி, இரவீந்திரா (1954.10.25) யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் பிறந்த நடனக் கலைஞர். கொக்குவில் கலாபவனம் கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா அவர்களிடம் முதன் முதலில் பரதம் கற்க ஆரம்பித்த இவர் பின்னர் பரதசூடாமணி பத்மஶ்ரீ அடையாறு லக்ஸ்மணன் அவர்களிடமும், பத்மபூஷணம் தனஞ்செயன் சாந்தா தம்பதியர்களிடமும் கற்றுள்ளார்.

தனது ஐந்து வயதிலேயே நடனக் கலையை முறையாக கற்க ஆரம்பித்த இவர் 1960-1970 காலப்பகுதியில் பாடசாலை மாணவியாக இருக்கும் போது பாடசாலை மட்டத்தில் சிறந்த நாட்டிய மாணவியாகவும், வட மாகாண மட்டத்தில் நடனத்தில் ஜாதிக நவோதய புலமைப்பரிசில் பெற்ற வகையிலும் 1974 இல் கலாசார அமைச்சு நடத்திய அகில இலங்கை பரதநாட்டிய போட்டியில் முதற்பரிசையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணத்து நாட்டிய மரபு எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வினை மேற்கொண்டு இலங்கையில் பரதநாட்டியத்தில் முதன் முதலில் முதுதத்துவமாணி பட்டத்தை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1972இல் நாட்டிய கலா கேந்திரம் என்ற நடனப் பள்ளியை ஆரம்பித்து ஸ்தாபகராக, இயக்குநராக இருந்து மானிப்பாய், சங்கானை, சுழிபுரம் போன்ற பல இடங்களில் பல மாணவிகளுக்கு நடனக்கலையை பயிற்றுவித்துள்ளார். இவரது நடனக் கலைக்கு நாட்டிய கலாஜோதி, நாட்டிய கலாராணி, நாட்டிய பேரொளி, பரதக்கலாபமணி போன்ற விருதுகளும் அகில இலங்கை பரத நாட்டியப் போட்டியில் 1974இல் தங்கப் பதக்க விருதும் சமூக மாமணி கௌரவ விருதும் மேலும் பல விருதுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 64150 பக்கங்கள் 67