ஆளுமை:மாலினி, உலகநாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:00, 2 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாலினி, உலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாலினி, உலகநாதன்
தந்தை -
தாய் -
பிறப்பு 1963.12.25
இறப்பு -
ஊர் சுன்னாகம்
வகை இசைக் கலைஞர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாலினி, உலகநாதன் (1963.12.25) யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் பிறந்த இசைக்கலைஞர். இவர் உ.இராதாகிருஷ்ணனிடம் 1 மாதமும் பின்னர் இ. ஆனந்தநாயகம் அவர்களிடமும் வயலின் கற்றுள்ளார். இணுவில் மத்திய கல்லூரியில் 24 வருடங்கள் இசை ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் தற்போது ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வருகின்றார்.

இணுவில் மத்திய கல்லூரியில் இவர் கற்பிக்கின்ற காலத்தில் அப் பாடசாலையில் தமிழின்னியம் வாத்தியக் குழுவினை சிறப்பாக பயிற்சி கொடுத்து 2012ஆம் ஆண்டு உடுவில் பிரதேச செயலக கலாசார விழாவின் போதும், யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற ஆளுநர்கள் மகாநாட்டின் போதும், வடமாகாண சபையின் கன்னி அமட்வின் போதும் வலயம்/ மாகாணம் சார்ந்த கலை நிகழ்வவுகளின் போதும் இக் குழுவின் மூலம் பல நிகழ்வுகளை வழங்கியுள்ளார்.

இவர் சங்கீதம் இசைத்தல், வயலின் வாசித்தலுடன் மட்டும் நின்று விடாது பாடல் இயற்றுதல், இசை அமைத்தல், கட்டுரை எழுதுதல் போன்ற பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவரது கலைச் சேவைக்காக 2014ஆம் ஆண்டில் உடுவில் பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் ஞானஏந்தல் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 64150 பக்கங்கள் 51
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாலினி,_உலகநாதன்&oldid=315437" இருந்து மீள்விக்கப்பட்டது