ஆளுமை:ரேகா, சிவலிங்கம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:51, 27 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரேகா
தந்தை சிவலிங்கம்
தாய் இந்திராணி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரேகா, சிவலிங்கம் யாழ்ப்பாணம் கம்பர்மலையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவலிங்கம்; தாய் இந்திராணி. ஆரம்ப காலத்தில் வாசுரேகா என்ற புனைபெயரிலேயே ஆக்கங்களை இவர் எழுதி வந்துள்ளார். ஆரம்ப, இடைநிலைக் கல்வியை யா/கம்பர்மலை வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யா/உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை நுண்கலைமாணி பட்டதாரியாவார். கவிதை, கட்டுரை எழுதுவதுடன் விவாதக்கருத்துக்களையும் எழுதி வருகிறார் ரேகா. இவரின் வாசிப்புப் பழக்கமே எழுத்துத்துறைக்கு இவர் பிரவேசிக்க உந்து சக்தியாக இருந்தது என்கிறார் எழுத்தாளர். இவர் உயர்தரம் படிக்கும் போதே எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். 2010ஆம் ஆண்டு இவர் எழுதிய கவிதை முதன் முதலாக மித்திரன் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இவர் எழுதிய கவிதைக்கு மித்திரன், வலம்புரி, யாழ்களரி பத்திரிகைகள் களம் அமைத்துக்கொடுத்துள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தொடர் நாடகங்களினால் ஏற்படும் சீரழிவுகள் தொடர்பாகவும் விவாதக்கருத்துக்களை மித்திரன் பத்திரிகையின் ஊடாக முன்வைத்துள்ளார். பல்கலைக்கழக அனுமதிகிடைத்து பல்கலைக்கழகம் சென்றவுடன் இவரின் பேனாமுனை சிறிது காலம் ஓய்வெடுத்துள்ளது. பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பெற்ற பின்னர் மீண்டும் முகநூலின் ஊடாக கவிதைகள் கட்டுரைகள் எழுதுவதென எழுத்துத்துறைக்கு மறுபிரவேசம் செய்துள்ளார் எழுத்தாளர் ரேகா. 20க்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளையும் 10க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். பெண்களுக்கு எதிரான கருத்தியல் ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராக தனது எழுத்து மூலம் பதில் அளித்து வருகிறார். சமகாலத்தில் சமூகத்தினால் பேசப்படும் விடயங்களையும் இவரது பேனாமுனை தொட்டுச்செல்வதற்கு மறுப்பதில்லை. பல உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் ஒலிஒளிபரப்பு நிறுவனங்களின் ஊடாக கவிதை செல்லாடல் நிகழ்ச்சிகளிலும் தனிநிகழ்ச்சியிலும் குழு நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் கம்பர்மலை மண்ணிலமைந்த ஸ்ரீ ஞானபைரவர் ஆலயத்திற்காக கம்பர்மலை பதி அமர்ந்த ஞானபைரவர்….. என்னும் பாடலையும் எழுதிப் பாடியுள்ளார் ரேகா. எழுத்தாளர் மிக விரைவில் ஒரு நூலை வெளியிடுவதற்குத் தயாராகி வருகிறார். யாழ் நூலகத்தின் நினைவுதினக் கவிதைப்போட்டியில் எரிந்தது நூலகமாக இல்லை தாயகம் எனும் தலைப்பில் கவிதை எழுதி வெற்றியாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதும் சான்றிதழும் பெற்றுக்கொண்டார்.

விருதுகள்

அமுதசுரபி அறக்கட்டளை கவிக்குழுமத்தின் காதல் கவிதை நாயகி விருது – 2018 ஆம் ஆண்டு.


குறிப்பு : மேற்படி பதிவு ரேகா, சிவலிங்கம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

நியூஸ்சிகரம் வலைப்பூங்காவில் ரேகா, சிவலிங்கத்துடனான நேர்காணல்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரேகா,_சிவலிங்கம்&oldid=310573" இருந்து மீள்விக்கப்பட்டது