ஆளுமை:ஜெகநாதன், சுப்பையா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:35, 20 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஜெகநாதன் |
தந்தை | சுப்பையா |
பிறப்பு | |
ஊர் | கரம்பன் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெகநாதன், சுப்பையா ஊர்காவற்துறை, கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். நாளை என்ற நாவல் இவருடையது. இவரது சிறுகதைகள் கல்கி முதலான இந்தியப் பத்திரிகைகளில் வெளிவந்ததுடன் நூல்களாகவும் வெளிவந்துள்ளன. மேலும் இவரது சிறுகதைகளில் கலாநிதி, சோலையில் வீசிய புயல், சொந்தமண் போன்றன முதன்மை பெறும் கதைகளாகும். கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையைத் தத்ரூபமாகப் படம்பிடித்துச் சித்தரிப்பதில் இவர் சமர்த்தர். காவலூர் இலக்கியவட்டம் என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்த பெருமை இவரையே சாரும். இவர் காவலூர் எஸ்.ஜெகநாதன் என்று அழைக்கப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 517
- நூலக எண்: 4253 பக்கங்கள் 26-27