ஆளுமை:ஸீனத், ரஹ்மா
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:11, 29 ஏப்ரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஸீனத் |
தந்தை | அப்துல் ரஹ்மான் |
தாய் | உம்மு |
பிறப்பு | |
ஊர் | வெயங்கொடை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸீனத், ரஹ்மா திஹாரியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் ரஹ்மான்; தாய் ஸீனத். பூகொட, குமரிமுல்லை அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியையாகவும் அதிபராகவும் இருந்து ஓய்வுபெற்றவர். கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல்கள், உருவகக்கதைகள் என நூற்றுக்கணக்கான ஆக்கங்களை இலக்கிய உலகிற்கு தந்துள்ளார் ஸீனத். இவரின் எழுத்துலக பிரவேசம் என்பது ஓய்வு பெற்ற பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன், நவமணி, சுடரொளி, செந்தூரம் ஆகிய நாளிதழிலும் ஜெஸ்மின் என்ற சஞ்சிகையிலும் இவரது ஆக்கங்கள் ளெிவந்துள்ளன. இவர் ஒரு ஓவியர் என்பது விசேட அம்சமாகும். புறப்படு மகனே! புறப்படு என்ற சிறுவர் பாடல், சிறுவர் கவிதைகளை உள்ளடக்கியதாக இவரது முதலாவது நூல் வெளியானது. எந்தக்காலம் என்ற தலைப்பில் சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கி இவரது மற்றுமொரு நூல் 2013ஆம் ஆண்டு வெளியானது.
வளங்கள்
- நூலக எண்: 9960 பக்கங்கள் 37-38
- நூலக எண்: 13127 பக்கங்கள் 21-22
- நூலக எண்: 13136 பக்கங்கள் 21-22
- நூலக எண்: 14930 பக்கங்கள் 30-32