ஆளுமை:சுமைரா, அன்வர்
பெயர் | சுமைரா |
தந்தை | அன்வர் |
தாய் | சுஹுதா |
பிறப்பு | |
ஊர் | குருநாகல் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுமைரா, அன்வர் குருநாகல் மல்லப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அன்வர்; தாய் சுஹுதா. குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் கற்றார். எழுத்தாளர் பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைமாணி பட்டதாரியாவார். பட்டப்பின் படிப்பு டிப்ளோமா தேசிய கல்வி நிறுவனத்தில் முடித்துள்ளார். தொடர் சாதனத் துறையிலும் டிப்ளோமா சான்றிதழ் (Dip in Mass Media) பெற்றுள்ளார். 1986ஆம் ஆண்டில் எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். தினகரன் வாரமஞ்சரி சிறுவர் உலகம் பகுதியில் யார் ஏழைகள்? என்ற தலைப்பில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து மித்திரன், தினமுரசு பத்திரிகைகளிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளான மாதர் மஜ்லிஸ், பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, நாளைய சந்ததி போன்ற நிகழ்ச்சிகளில் ஆக்கங்கள் எழுதியுள்ளார். மல்லிகை, இளங்கதிர், பூங்காவனம், பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சஞ்சிகையிலும் இவரது சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், நாவல் என ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. எண்ணச் சிதறல்கள் (கவிதைத் தொகுதி) 2003, விடியலில் ஓர் அஸ்தமனம் (நாவல்) 2009, வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் (நாவல்) – 2011 ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. சிறுவர் இல்கியத்தின் மீது அக்கறை கொண்ட சிறுவர்களுக்காக நிறைய கதைகளையும் பாடல்களையும் எழுதியுள்ளார். வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டியில் முதல் பரிசை வென்ற சிறுவர் பாடல் தொகுதியும் கதைகளையும் நூலுருப்படுத்தி சிறுவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்பதே தனது விருப்பம் எனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர்.
விருதுகள்
விடியலில் ஓர் அஸ்தமனம் நாவலுக்கு வடமேல் மாகாண இலக்கிய விழாவில் சிறந்த நாவலுக்கான 2010ஆம் ஆண்டு முதல் பரிசு.
எண்ணச் சிதறல்கள் வடமேல் மாகாண இலக்கிய விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான 2004ஆம் ஆண்டு முதல் பரிசு.
படைப்புகள்
வளங்கள்
- நூலக எண்: 5815 பக்கங்கள் 2
- நூலக எண்: 8310 பக்கங்கள் 90
- நூலக எண்: 9016 பக்கங்கள் 23-24
- நூலக எண்: 9779 பக்கங்கள் 37-39
- நூலக எண்: 11146 பக்கங்கள் 9-12