ஆளுமை:ஜெஸீமா, ஹமீட்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:15, 16 ஏப்ரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெஸீமா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெஸீமா
தந்தை ஹமீட்
தாய் கதீஜா பிபி
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெஸீமா, ஹமீட் மாத்தளை சின்னவெல்கந்தையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஹமீட்; தாய் கதீஜா பிபி. ஆரம்பக் கல்வியை பிட்டகந்த கந்தேனுவர தமிழ் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மாத்தளை ஆமீனா மகளிர் பாடசாலையிலும் கற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் சிறப்பு பட்டதாரியாவார். 2003 -2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றார். பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் நிறைவு செய்துள்ளார். தற்பொழுது ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். பாடசாலைக் காலத்திலேயே கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார் ஜெஸீமா. நிழலின் காலடியோசை (கவிதைத்தொகுப்பு), இலங்கையின் ஆட்சியாளர்கள் (வரலாறு), வரலாற்று தேசப்படங்களும் பயிற்சிகளும் (தரம் 6-13 வரை), இலங்கை வரலாறு (உயர்தர வகுப்பு பரீட்சை வழிகாட்டி நூல்), ஐரோப்பிய வரலாறு (உயர்தர வகுப்பு பரீட்சை வழிகாட்டி நூல்) ஆகிய ஐந்து நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். பல கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களையும் இவர் பெற்றுள்ளார். 2002 ஆம் ஆண்டு உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு நடத்திய ஆய்வுக் கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

விருதுகள்

2014ஆம் ஆண்டு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான விபுலானந்தர் மன்றம் மலையக தமிழருவி விருது வழங்கியது. இந்தியா அம்பூரில் ஊ...ல..ழ..ள கவிதை குழுமத்தின் மூலம் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் இவர் பரிசை வென்றுள்ளார்.

படைப்புகள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜெஸீமா,_ஹமீட்&oldid=307862" இருந்து மீள்விக்கப்பட்டது