ஆளுமை:பரமேஸ்வரி, இளமுருகனார்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:09, 8 ஏப்ரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரமேஸ்வரி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமேஸ்வரி
பிறப்பு 1915
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ்வரி, இளமுருகனார் (பண்டிதர்) (1915) யாழ்ப்பாணம், கட்டுடையில் பிறந்து மானிப்பாய், நாவாலியில் வாழ்ந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாலயத்திலும் உயர் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றார். பண்டிதர் இளமுருகனாரை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்று அவரின் தமிழ்ப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். கதிரைமுருகன் கலிப்பா, பறாளை விநாயகர் மும்மணிமாலை முதலிய பாச்செய்யுள்களை எழுதியவர். நாமகள் புகழ்மாலை, கதிரைச் சிலேடை வெண்பா, சிறுவர் செந்தமிழ் ஆகிய தங்கத்தாத்தாவின் நூல்களுக்கு விளக்கவுரை எழுதி அணிசேர்த்தவர். இராமாயணத்தில் இருந்து கும்பகர்ணன் வதைப்படலம், மந்தரை சூழ்ச்சிப்படலம், கைகேயி சூழ்ச்சிப்படலம் ஆகியவை பாடநூல்களாக இருந்தபொழுது அவற்றிற்கான சிறந்தவுரைகளை எழுதியவர். தனது கணவரின் பூரணன் கதை, கப்பற் பாட்டு, செந்தமிழ்ச் செல்வம் ஆகிய நூல்களுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். மங்கையர்கரசி என்ற நாடகத்தினையும் எழுதியுள்ளார். ஈழத்து சிதம்பர புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். இவரின் திறமைக்காக இவருக்கு பண்டிதமணி என விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.