ஆளுமை:பிலோமினா, ஆர்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:12, 7 ஏப்ரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிலோமினா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிலோமினா
பிறப்பு
ஊர் கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிலோமினா.ஆர் கம்பஹா, வத்தளையில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வி கதிட்ரல் கல்லூரியிலும் பின்னர் தெமட்டெகொட அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் கல்வி கற்றார். தனது 11 ஆவது வயதில் தினகரன் பத்திரிகைக்கு ”பெண் உலகம்” பகுதியின் ஊடாக எழுத்துலகிற்கு பிரவேசித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிந்தாமணி பத்திரிகையின் ஊடாக பெண் விடுதலை, பெண் அடிமைத்தனத்தை பற்றியும் தொடர்ந்து எழுதியுள்ளார். ஈழமுரசு, தினக்குரல், சுடர்ஒளி பத்திரிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பிலோமினா போல் என்ற பெயரில் இவர் எழுதிய ஆக்கங்கள் பல இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பபட்டன. 1982ஆம் ஆண்டு பாரதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வீரகேசரி பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு கற்பு நிலையென்று சொல்ல வந்தால்… என்ற குறளை மையமாக வைத்து இவர் எழுதிய வாழப்பிறந்தவர்கள் என்ற கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து யாழ் ஈழமுரசு பத்திரிகைக்கு சிறுகதைகள் எழுதி வந்துள்ளார். அபிணி என்ற புனைபெயரில் வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதிக்கு 18 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளையும் எழுதியுள்ளார் பிலோமினா. புரவலர் புத்தக பூங்காவின் ஊடாக 2010ஆம் ஆண்டு இமிடேஷன் தோடு எனும் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பிலோமினா,_ஆர்&oldid=304304" இருந்து மீள்விக்கப்பட்டது