ஆளுமை:வேதிகா, பிரபாகரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:52, 25 மார்ச் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேதிகா
தந்தை பிரபாகரன்
தாய் நிலானி
பிறப்பு 1996.06.15
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதிகா, பிரபாகரன் (1996.06.15) வவுனியா, சேமமடுவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை பிரபாகரன்; தாய் நிலானி. ஆரம்பக் கல்வியை சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்திலும் இடைநிலை உயர் கல்வியை வவுனியா கனகராயன்குளம் மகாவித்திலயத்திலும் கற்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவியாவார் வேதிகா. இவரின் கண்ணாடிப் பூக்கள் எனும் கவிதைத் தொகுப்பை 2015ஆம் ஆண்டு கனகராயன்குளம் மகாவித்தியாலயம் பழைய மாணவர்களால் வெளியிடப்பட்டது. 2018ஆம் ஆண்டு மிரட்டும் நிழல் எனும் கவிதைத் தொகுப்பை யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை வெளியிட்டது. வானொலியின் ஊடாகவே இவரின் எழுத்துத்துறை அறிமுகம் எனத் தெரிவிக்கிறார் வேதிகா. வலம்புரி பத்திரிகை, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் வெளியிடப்படும் மருதமுகில் சஞ்சிகையிலும் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

விருது 2015ஆம் ஆண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார விழாவில் சிறந்த கவிஞருக்கான விருது.

குறிப்பு : மேற்படி பதிவு வேதிகா, பிரபாகரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்