ஆளுமை:செல்வி, தில்லையம்பலம்
பெயர் | செல்வி |
தந்தை | தில்லையம்பலம் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர், கல்வியாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வி, தில்லையம்பலம் யாழ்ப்பாணம், வேலணை அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பிறந்த கல்வியாளர். இவரது தந்தை தில்லையம்பலம்; செல்வி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார். அத்துடன் இவர் இந்தியாவின் அலஹபாத் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் விஞ்ஞான பட்டதாரியாவார். தொடர்ந்து முதுமாணி பட்டத்தையும் பெற்றார். 1922ஆம் ஆண்டு செல்வி அமெரிக்கா கொலம்பிய பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தனது ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். சுண்டிக்குளி விடுதிப் பாடசாலை 1896ஆம் ஆண்டு கிறிஸ்தவ திருச்சபை சமயக்குழுவினரின் முயற்சியால் ஆங்கில பாடசாலையாகத் தோற்றம் பெற்றது. இதன் முதலாவது சுதேச அதிபர் செல்வி இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலமாவார். இந்தியக் கடலில் சுறா மீன் எனும் தலைப்பிலேயே இவர் தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். இவரது ஆய்வுக்கட்டுரை இந்திய மொழி பலவற்றில் மொழிமாற்றம் செய்யப்பட்டுப் பல பல்கலைக்கழக நூல்நிலையங்களும் உள்வாங்கியுள்ளது. இலங்கையில் விஞ்ஞானத்துறை ஒன்றில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் செல்வி தில்லையம்பலத்திற்கே உரியது. இவரது ஆற்றலை கண்டறிந்த கிறிஸ்தவ திருச்சபை செல்வி தில்லையம்பலம் அவர்களை லக்னோ பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த பெண்களுக்காக இசபெல்லா தோபோர்ண் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக நியமித்தது. அமெரிக்காவில் மாசசூசெற்ஸ் பல்கலைக்கழத்தின் வெஸ்லி பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் பரிமாற்றம் செயல்முறைப்படுத்தப்பட்டதன் விளைவாக செல்வி தில்லையம்பலம் அக்கல்லூரிக்கு விலங்கியல் பேராசிரியராக தற்காலிகமாக மாற்றப்பட்டார். இத்தகைய பேராசிரியர் பரிமாற்றம் மூலம் கௌரவம் பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாக செல்வி தில்லையம்பலம் கருதப்படுகிறார். ஒரு வருடம் இங்கு சேவையாற்றிய பின்னர் மீண்டும் இந்தியா வந்த செல்வி தில்லையம்பலம் மதுரை லேடி டோக் கல்லூரியில் அதிபராக பணியாற்றினார். பின்னர் பீஹாரில் உள்ள திருச்சபைக் கல்லூரியில் இவர் மேற்பார்வையாளர் நியமனம் பெற்றார். இசபெல்லா தோர்போர்ண் கல்லூரி இவரின் சேவையைக் கௌரவிக்கும் முகமாக அக்கல்லூரியில் கலாநிதி இ.ஏ.தில்லையம்பலம் புலமைப்பரிசில், வருடாவருடம் உயிரியல் துறையில் திறமைகாட்டும் மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.