ஆளுமை:வைதேகி செல்மர் எமில்
பெயர் | வைதேகி |
பிறப்பு | 1954 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வைதேகி செல்மர் எமில் யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைஞர். யாழ் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்றார். யாழ் பல்கலைக்கழக அரங்கியல் சிறப்புப்பட்டம், தமிழ்நாடு புதுவைப் பல்கலைக்கழகத்தில் அரங்கியலில் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார். புதுடில்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளி நடத்திய ஒரு மாதகால நவீன நாடக அரங்கப் பயிற்சி, அசாமில் நடைபெற்ற ஒரு மாத “Physical Language” என்ற பயிற்சியிலும் தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட நான்கு நாள் பரிசோதனைக்கான அரங்கப் பயிற்சியிலும் கொழும்பில் நடைபெற்ற சோமலதா சுபசிங்ஹவின் நாடகப் பயிற்சியிலும், யாழ்ப்பாணத்தில் தொம்சன் அவர்களின் அரங்கப் பயிற்சி பட்டறையிலும், திருமறைக்கலாமன்றத்தின் அரங்கப் பயிற்சிப்பட்றையிலும் பங்கு கொண்டு தனது அரங்க ஆளுமையை வளர்த்துக்கொண்டவர். தவிர்ப்பு, 2000, கானல் நீரோ, விடியலின் பிரசவம், நிழலொன்று அனலாக, மனிதம் போன்ற நாடகங்களை எழுதி நெறியாளுகை செய்துள்ளார்.