ஆளுமை:நடனவதி, முருகேசு
பெயர் | நடனவதி |
தந்தை | முருகேசு |
பிறப்பு | 1950.07.03 |
ஊர் | அநுராதபுரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடனவதி, முருகேசு (1987.09.10) அநுராதபுரத்தில் பிறந்த எழுத்தாளர். கிளிநொச்சி தருமபுரம் கிழக்கை வதிவிடமாகக் கொண்டவர். வட இலங்கை சங்கீத சபையின் சகல தர பரீட்சைகளிலும் முதன்மை சித்திகளுடன், இசைத்துறைக்கான டிப்ளோமா உயர் கற்கைநெறியை பூர்த்தி செய்துள்ளார். இசைத்துறை சார் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திப் பயிலரங்குகளில் பங்குபற்றனராகவும் பயிற்றுவிக்கும் வளவாளாகவும் நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார். 2003, 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் தருமபுரம் நெத்தலியாறு முத்து விநாயகர் ஆலய அறநெறி பொறுப்பாசிரியராகவும் சேவையாற்றி சிறப்பாக பண்ணிசை வகுப்புக்களையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் ஒழுங்கமைத்து சேவையாற்றியுள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வரும் பிரதேச கலாசார பேரவையின் ஆரம்ப கால உறுப்பினராகவும் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட தேசிய கலை இலக்கிய போட்டிகளில் நடுவராகவும் செயற்பட்டு வருகிறார். கிளிநொச்சி மாவட்ட ஆரம்ப காலத்தில் சாஸ்திர ரீதியாக இசையைப் பயின்று அரச பணியில் ஓய்வு பெற்ற பின்னரும் கலைச்சேவையாற்றி வருகிறார்.
விருதுகள்
2011ஆம் ஆண்டு கண்டாவளை பிரதேச கலாசார பேரவை கலை ஒளி விருதினை வழங்கியது.
2014ஆம் ஆண்டு கிளிநொச்சி செயலக பண்பாட்டு பேரவை கலைக்கிளி விருதினையும் வழங்கியுள்ளது.