ஆளுமை:யோகேஸ்வரி, கிருஸ்ணன்
பெயர் | யோகேஸ்வரி |
தந்தை | கிருஸ்ணன் |
தாய் | தெய்வானை |
பிறப்பு | 1970.09.19 |
ஊர் | பதுளை |
வகை | எழுத்தாளர், சமூகசேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யோகேஸ்வரி, கிருஸ்ணன் (1970.09.19) பதுளை விஹாரகல் கீழ்ப்பிரிவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கிருஸ்ணன்; தாய் தெய்வானை. இவர் பண்டாரவளை மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். SLIDA வின் ஊடாக நல்லாட்சி தொடர்பான டிப்ளோமா முடித்துள்ளார். பொதுமக்கள் அடிப்படை சுகாதாரம் தொடர்பான ஒரு மாத பயிற்சியை ஜப்பானுக்கு புலமைப்பரிசிலில் சென்று பெற்றுள்ளார். பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளை புரிந்துகொண்டு அவர்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலேயே இவரின் எழுத்துக்கள் அமைந்துள்ளன. தொழிலாளர் உரிமை, பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம், பெண்களின் அரசியல் பிரவேசம், மூடநம்பிக்கை, மதம்: பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் தடையாக இருக்கிறது உதாரணமாக பெண்கள் பூப்பெய்த பின்னரான எல்லாவித மத ரீதியான அடக்குமுறை போன்றவை தொடர்பில் இவரின் பேனா முனை தொட்டுச்செல்கிறது. அத்தோடு சமூகப் பிரச்சினை, பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவது தொடர்பான கட்டுரைகளையும் இவர் எழுதி வருகிறார். இலங்கையில் ஸ்தாபனமயமற்ற பெண் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். இந்த தொழிற்சங்கத்தின் பெயர் ”உழைக்கும் பெண்கள் முன்னணி”யாகும். இச் தொழிற்சங்கத்தின் ஊடாக ”சபதம்” என்னும் காலாண்டு இதழை வெளியிட்டு வருவதுடன் இதன் ஆசிரியராகவும் யோகேஸ்வரி செயற்பட்டு வருகிறார்.
குறிப்பு : மேற்படி பதிவு லறீனா அப்துல் ஹக் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.