வார்ப்புரு பேச்சு:அறிமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூலகம் திட்டம்:

  • இது ஒரு மின்னூலாக்கத் திட்டமாகும்.
  • ஈழத்து நூல்களையும், சஞ்சிகைகள் போன்றனவற்றையும் மின்வடிவில் மாற்றிப் பாதுகாப்பதே இதன் நோக்கம்.
  • இங்கே ஈழத்து நூல்களையும் சஞ்சிகைகளையும் நீங்கள் இலவசமாகப் படிக்கலாம்.
  • இத்திட்டம் சமுதாய உடைமை. தனி நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ சொந்தமில்லை.
  • இதில் பங்குபற்றும் அனைவரும் தன்னார்வலர்களே.
  • இத்திட்டத்தில் நீங்களும் தன்னார்வலராக இணைந்து செயற்படலாம்.

கருத்து

இந்த அளவு விரிவான அறிமுகம் முதற் பக்கத்தில் தேவையில்லை என்று நினைக்கிறேன். அனைவரும் பங்களிப்பதில் தங்கியிருக்கும் விக்கிபீடியா கூட இந்தளவு விரிவான அறிமுகம் வழங்குவதில்லை. இணையத்தினூடாக வருபவர்கள் தன்னார்வமாகப் பங்களிப்பதன் சாத்தியப்பாடுகள் நுஉலகம் திட்டத்தைப் பொறுத்தவரை மிகக் குறைவு. அதிகளவு நிதியை ஈர்க்க முடிந்தால்தான் பயனுண்டு. ஆனால் நூலகம்:அறிமுகம் பக்கத்தில் இத்தகையதொரு விரிவான அறிமுகம் தேவை. இன்னும் சிலராவது கலந்துரையாடத் தொடங்குவது பயனுள்ளதாய்ருக்கும். --கோபி 04:09, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

இப்பொழுது இருக்கும் ஒற்றை வசன அறிமுகம், எளிமையாக இல்லை. அதனால் தான் இப்படி உடைத்துப் போட முயன்றேன். ஏதாவது தொடுப்பினூடாக முதன் முதல் வரும் பயனர் ஒருவருக்கே இந்த அறிமுகம் தேவைப்படுகிறது. அப்படி வரும் வலைக்குடிமகன் தொடுப்புக்களை சொடுக்கி மினக்கடுவார் என்றில்லை. இப்பொழுதிருக்கும் அறிமுகம் சாதாரண வாசகர்களுக்கு புரியாது. --மு.மயூரன் 04:14, 29 ஆகஸ்ட் 2007 (MDT)