ஆளுமை:யோகலட்சுமி, சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:33, 10 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (படைப்புகள்)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகலட்சுமி
தந்தை சோமசுந்தரம்
தாய் லட்சுமிப்பிள்ளை
பிறப்பு 1944.07.04
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகலட்சுமி, சோமசுந்தரம் (1944.07.04) யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சோமசுந்தரம்; தாய் லட்சுமிப்பிள்ளை. யாழ்ற்ரன் கல்லூரி, காரைநகர் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கல்வியைக் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கலைமானிப்பட்டத்தையும் தமிழ் பண்டிதை பரீட்சையிலும் சித்தி பெற்றுள்ளார். அத்தோடு பட்டப்பின்படிப்பு டிப்ளோமா முடித்துள்ளார் எழுத்தாளர். காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி, காரைநகர் இந்துக்கல்லூரி, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, புங்குடுதீவு மகாவித்தியாலயம்,செட்டிகுளம் ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவர் ஆசிரியஆலோசகராகவும் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா கற்கை நெறியின் பகுதிநேர விரிவுரையாளராகவும் அகில இலங்கை தமிழ் பாடத்திற்கான வளவாளராகவும் கடமையாற்றியுள்ளார்.1977ஆம் ஆண்டு யோகலட்சுமி சோமசுந்தரம் திருப்பாவை - திருவெம்பாவை என்பனவற்றுக்கு ஆய்வுரை எழுதியதன் மூலம் எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். சொந்த ஊரான காரைநகரிலிருந்து இருந்து 1996ஆம் ஆண்டு இடம்பெயர்வுடன் வவுனியாவை தனது வசிப்பிடமாகக்கொண்டு வசித்து வருகிறார். 95க்கும் மேற்பட்ட கும்பாபிஷேக மலருக்கு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

விருது: இந்து கலாசார அமைச்சின் கலாபூஷணம் விருது 2014 வடமாகாண முதலமைச்சர் விருது - 2014 செம்மொழிச் செல்வி விருது - வவுனியா பிரதேசசபை - 2007 அருள்மொழிச்செல்வி - சேக்கிழார் மன்றம் சைவச் சான்றோர் விருது - சிவநெறி பிரசாரகர் மன்றம் அறிவுச்செல்வர் விருது - சுவிஸ் காரைநகர் அபிவிருத்திச் சபை தமிழ்திலகம் - பட்டப்படிப்பு மாணவர்கள் பிரான்ஸ் செந்நெறி பிரசாரகர் - கலாசார உத்தியோகத்தர் வவுனியா கலைஒளி - பிரதேசசெயலகம் வவுனியா கலைச்சுடர் - மாவட்ட செயலகம் வவுனியா அருள் ஞான வித்தகர் - இலங்கை இந்து கலாசார பேரவை இயற்றமிழ் செல்வர் - கலை இலக்கிய வட்டம் வவுனியா செந்தமிழ் சுடர்ஒளி - முத்தமிழ் சங்கம் சர்வதேச இந்து இளைஞர் சேவை

குறிப்பு : மேற்படி பதிவு யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்