ஆளுமை:பற்றிமாகரன், றீற்றா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:50, 26 டிசம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=றீற்றா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றீற்றா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பற்றிமாகரன், றீற்றா யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். புலம்பெயர்ந்து தற்பொழுது இலண்டனில் வசித்து வருகிறார். யாழ் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும் இள விஞ்ஞானிமாணி பட்டத்தை ஒக்ஸ்வேர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலகத் தமிழ் தேர்வின் உயர்தர வகுப்பு தமிழ் வினாத்தாள் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இலண்டனின் முதல் தமிழ் வானலையான சன்ரைஸ் என்னும் வானொலியில் தயாரிப்பாளராக ஊடகப் பணியைத் தொடங்கிய றீட்டா ஐரோப்பாவின் வானொலி அலைவரிசைகளிலும் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுள்ளார். ஒக்ஸ்வேர்ட்டில் தமிழ் மற்றும் நுண்கலைகளுக்கான மையத்தினை நடாத்தி வருகிறார். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மற்றும் பல மாநாடுகளில் கலந்து கொண்ட சங்ககாலத் தமிழர் வாழ்வு மற்றும் எழுத்துச் சீர்திருத்தம் என்பன தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். அத்தோடு சைவசமயம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றையும் சைவசமய மாநாடுகளில் றீற்றா சமர்ப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


படைப்புகள்

குறிப்பு : மேற்படி பதிவு பற்றிமாகரன், றீற்றா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.