ஆளுமை:மனோரஞ்சனி திருநாவுக்கரசு, கனகரத்தினம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:32, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மனோரஞ்சினி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோரஞ்சினி
தந்தை திருநாவுக்கரசு
தாய் வியாகம்மா
பிறப்பு 01.06.1956
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை இசை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோரஞ்சனி திருநாவுக்கரசு கனகரத்தினம் (01.06.1956) யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரது தந்தை திருநாவுக்கரசு; தாய் வியாகம்மா. யாழ் ஆனைபந்தி மெ.மி.த.க.பாடசாலை மற்றும் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். யாழ் இராமநாதன் நுண்கலை பல்கலைக்கழகத்தில் இசைக்கலைமணி பட்டம் (பிரதான பாடம் -வயலின்), தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை பூர்த்தி செய்துள்ளார். இசை தொடர்பான பல கட்டுரைகளை பத்திரிகைகளுக்கு மனோரஞ்சனி எழுதியுள்ளார். இவரின் இசை ஆசிரியர்கள் சித்திவிநாயகம், கோமளா கந்தையா, சாந்தா சுப்பிரமணியம், தனதேவி சுப்பையா, ஞானாம்பிகை புத்திரசிகாமணி ஆகியோரை குறிப்பிடலாம். இவர் வவுனியா விபுலானந்தா கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ,வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா சைவப்பிரகாசம் மகளிர் கல்லூரி, வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இவர் இசை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

விருது: வட இலங்கை சங்கீதசபை (ஆசிரியர் தராதரம்) கலாவித்தகர் விருது குரு பிரதீபா பிரபா-2015