ஆளுமை:பவானி, தேவதாஸ்
பெயர் | பவானி |
தாய் | - |
பிறப்பு | |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பவானி, தேவதாஸ் கண்டியில் பிறந்த எழுத்தாளர்.1987 ஆம் ஆண்டு அல்பிரட் கிருஷ்ணபிள்ளையைப் பற்றி "கிருஸ்தவ கம்பர்" என்ற ஆக்கம் சிந்தாமணியில் இவரது புகைப்படத்துடன் வெளிவந்தது. இதற்குப் பின்னர் இவர் ஆக்கங்களை பத்திரிகைகளுக்கு எழுதிஅனுப்பிய போதும் இவரது ஆக்கங்கள் வெளிவரவில்லை. 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது 17 வயது சிங்கள யுவதியொருவர் வடபுலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் உடமைகளைக் காப்பாற்ற முனைந்து அது நிறைவேறாமல் தற்கொலை செய்துகொண்டாள். இந்த உண்மைச் சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டுவர முயன்று 2003ஆம் ஆண்டு நினைவில் நீங்காதவள் என்ற தலைப்பில் உண்மைச் சம்பவத்தை எழுதினார். இது வீரகேசரி நாளிதழில் வெளியானதாகத் தெரிவிக்கும் எழுத்தாளர் பவானி தேவதாஸ் இதுவே தான் எழுத்துலகிற்கு பிரவேசிக்க காரணமாகியதெனவும் தெரிவிக்கிறார். "விசுவாசிகளுக்கு வழிகாட்டி", "சமாதான உருவாக்கம்" போன்ற சமய சார்பான நூல்களையும் "முரண்பாடுகளுக்கு மத்தியில் பெண்கள்" என்னும் நூலையும் மொழிபெயர்த்துள்ளார். வீரகேசரி நாளிதழில் இவரின் ஆக்கங்கள், சிறுகதைகள் பல வெளிவந்துள்ளன. கனகசெந்தி கதா விருது கிடைத்த கதைகளை தொகுத்து மீரா பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். "விடுமுறைக்கு விடுமுறை" இவரின் சிறுகதை புரவலர் புத்தகப் பூங்கா அமைப்பினரால் வெளியிடப்பட்டது.
விருதுகள் கனகசெந்தி கதா விருது மலையக சாகித்ய விருது
வளங்கள்
- நூலக எண்: 5340 பக்கங்கள்
- நூலக எண்: 13146 பக்கங்கள் 4-9