ஆளுமை:சிவயோகமலர், ஜெயக்குமார்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:45, 15 அக்டோபர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவயோகமலர்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவயோகமலர்
தந்தை சின்னத்தம்பியார்,கணேசு
தாய் சின்னம்மா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவயோகமலர், ஜெயக்குமார் (1950) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, அல்வாய் மேற்கு, திக்கம் என்னும் கிராமத்தில் எழுத்தாளர் பிறந்தார். இவரது தந்தை சின்னத்தம்பியார்,கணேசு; தாய் சின்னம்மா. திக்கம் மெதடிஸ்த மிஷன் பாடசாலை, பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலை, இராமநாதன் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பட்டதாரியான இவர் சிந்தாமணி பத்திரிகையில் 1984ஆம் ஆண்டு "மகன் தேடிய வீடு" என்ற சிறுகதையின் ஊடாக எழுத்துலகிற்கு இவர் பிரவேசித்துள்ளார். இவரின் ஆக்கங்களான சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன், சுடர்ஒளி, ஈழுநாடு, தினபதி, சிந்தாமணி, சிரித்திரன், முரசொலி, ஈழுமுரசு, தினமுரசு, இலண்டன் தமிழ் உலகம், கற்பகம், அருள் ஊற்று அகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.ஜே.ஜெயக்குமார் இவரின் கணவராவார். "அடிமையின் காதலி" என்ற சரித்திர நாவலை எழுதியதன் மூலம் ஈழத்தின் முதலாவது பெண் சரித்திர நாவலாசிரியர் என்ற பெருமைக்குரியவராக உள்ளார் சிவயோகமலர். சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சமூக விஞ்ஞான மொழிகள் பீடம் இவரின் சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், இலக்கியப் படைப்புக்களை ஆய்வு செய்து "திக்கம் சிவயோகமலரின் இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வு" என்னும் நூலை வெளியிட்டுள்ளது. எழுத்துத்துறையில் குறுநாவல், நாடகம், குழந்தைக் கவிதைகள் ஆகிய இலக்கியப் பரப்பில் தடம் பதித்துள்ளார். மோல்டே தமிழக கலைக்கலாசார மன்றம் உலகளாவிய நடத்திய நாடக எழுத்தாக்கப் போட்டியில் இவர் எழுதிய "புலம்பெயரும் பாசங்கள்" நாடகப் பிரதி முதற்பரிசை பெற்றுக்கொண்டது. யாழ் இலக்கிய வட்டமும் ஈழநாடு பத்திரிகையும இணைந்து நடத்திய நாவல் போட்டியில் "கல்லுக்குள் ஈரம்" எனும் நாவல் பரிசு பெற்றது. முரசொலி பத்திரிகையும் யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டியில் இவரின் "தேட்டம்" குழந்தைக் கவிதைத் தொகுப்பு பரிசை பெற்றது. • 1997 இல் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரெஞ்சுக் கிளையினர் நடத்திய பாவலர் தெ.து. துரையப்பாபிள்ளை நினைவு அகில உலக சிறுகதைப் போட்டியில் இவரது “பிறந்த மண்” சிறுகதை முதற் பரிசைப் பெற்றுக்கொண்டது.

விருதுகள் • “பாவத்தின் சுவடுகள்” சிறுகதை கலாசார சமய அலுவல்கள் அமைச்சினால் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்பட்டு, சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருதும்,