ஆளுமை:இராஜம் புஷ்பவனம்
பெயர் | இராஜம் புஷ்பவனம் |
பிறப்பு | 1944 |
இறப்பு | 1994 |
ஊர் | கொழும்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராஜம் புஷ்பவனம் (1994) கொழும்பில் பிறந்தவர், கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் கழகத்தில் கல்வி கற்றார். பின்னர் தந்தையாரின் தொழில் இடமாற்றம் காரணமாக திருகோணமலையிலும் அடம்பனிலும் (மன்னார்) கல்வி கற்றுள்ளார். தனது 14 வயதில் வீரகேசரி சிறுவர் பகுதியில் "அமாவாசைப் பேய்" என்ற கதையை எழுதியதன் மூலம் இவர் எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். வீரகேசரி, தினகரன், தினபதி, உதயசூரியன் ஆகிய பத்திரிகைளில் கவிதை, சிறுகதைகளை எழுதி வந்ததுடன் சிற்றிதழ்களான கலைச்செல்வி', கற்பகம், கதிரவன், மலர் என்பவற்றிலும் சிறுகதைகள் கவிதைகளை எழுத்தாளர் இராஜம் புஷ்பவனம் எழுதிவந்துள்ளார். "வில்லிசை வேந்தர்" என அழைக்கப்படும் லடீஸ் வீரமணி அவர்களிடம் முறைப்படி வில்லிசை கற்ற வில்லசைக் கலைஞராவார். இவர் எழுதிய பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் பெருமளவு வெளிவந்துள்ளது. ஆனால் பெரிதாக நூல் வடிவில் வரவில்லை. வில்லிசையின்பால் கொண்ட தீவிர ஈடுபாட்டால் பிற்காலத்தில் "வில் பிறந்த கதை" என்னும் நூலை வெளிட்டார். கேலிச்சித்திரம், எப்பிரய்டரி தையல்கலை, கவிதை, சிறுகதை, நாடகம், ஒப்பனைக் கலைஞர், வானொலி, மெல்லிசை என இவர் பல துறைகளில் கால் பதித்தவர். சினிமாத்துறையில் திரைக்கதை வசனம் எழுதுவதே மிகச் சிரமமான பணி அதிலும் மொழிமாற்றப்படங்களுக்கு வசனம் எழுதுவது கடினம். 1975ஆம் ஆண்டு ஹென்றி சந்திரவன்ச நெறியாள்கை செய்த சிங்களப் படத்தின் தமிழ் பதிப்பான "சுமதி எங்கே" படத்தின் வசன கர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் இவர் இருந்துள்ளார். இங்கைத் திரைத்துறையில் இவ்வாறாக பணியாற்றிய முதல் பெண்மணி இவராக இருக்கலாமென கருதப்படுகிறது. "ஹார லக்ஷய" என்ற திரைப்படத்தை தமிழில் ("டப்") மொழிமாற்றம் செய்த போது அப்படத்தின் பாடல்களை தமிழில் மொழிமாற்றம் செய்து கொடுத்தார். இப்படத்தின் உதவி இயக்குனராக செயற்பட்டுள்ளார். நாடகத்துறையில் கொண்ட ஆர்வத்தால் இவரே நாடகங்களை எழுதி நடித்தும் வந்துள்ளார். சரித்திர நாடகங்கள், நகைச்சுவை சமூக நாடகங்கள் போன்றவற்றையும் மன்னார், அடம்பன் மற்றும் அயல் கிராமங்களிலும் மேடையேற்றி மக்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். மன்னார் மாவட்டத்தில் முதன்முதலாக பெண்களை மட்டும் வைத்து பல நாடகங்களை நெறியாள்கை செய்து மேடையேற்றி பல வெற்றிகளைக் கண்டவர். இவரின் "புதையல் கிடைத்து", "லக்ஸ்பிரே மாப்பிள்ளை", "யவனராணி" போன்ற நாடங்கள் 20 முறைக்கு மேல் மேடையேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதுகை மோனை உடன் கவி படைப்பதிலும் திறமை மிக்கவராக விளங்கினார் இராஜம் புஷ்பவனம். "பொது ஜன ஹண்ட" (மக்கள்குரல்) பத்திரிகையின் தமிழ்ப் பகுதியின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். ஆன்மீகத்துறையிலும், ஜோதிட துறையிலும் சிறந்த ஞான அறிவுடையவராக விளங்கினார்.
படைப்புகள்
வளங்கள்
- நூலக எண்: 288 பக்கங்கள்
- நூலக எண்: 588 பக்கங்கள் 1
- நூலக எண்: 8300 பக்கங்கள் 18-19,23
- நூலக எண்: 11508 பக்கங்கள்