ஆளுமை:வசந்தி, தயாபரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:29, 1 செப்டம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வசந்தி
தந்தை இராசையா
தாய் பூரணம்
பிறப்பு 1956.12.16
இறப்பு -
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வசந்தி, தயாபரன் (1956.12.16) கொழும்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசையா; தாய் பூரணம். கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடத்தில் தனது கல்வியை கற்ற இவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தில் கடமையாற்றிய வசந்தி தயாபரன் ஒரு மொழிபெயர்ப்பாளராக தற்பொழுது வேலையைத் தொடர்ந்துவருகின்றார். 1981ஆம் ஆண்டு தயாபரனை காதல் திருமணம் செய்துகொண்ட வசந்தி தயாபரன் தனது ஆளுமையின் பங்காளியாக தனது கணவரையே கூறுகிறார். இவர் ஒரு சுங்க அதிகாரி. இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள். இவர்கள் மூவரும் பொறியியலாளர்கள். இவரது அம்மா இவருக்கு கலைகளைக் கற்கவைத்தார். கர்நாடக சங்கீதத்திலும் பரதநாட்டியத்திலும் வயலினிலும் ஆர்வமுள்ள இவர் வாய்ப்பாட்டில் (வ.இ.ச.சபை)யின் 5ம் தரமும் , வயலினில் 3ம் தரமும் சித்தி பெற்ற இவர், பரதநாட்டியத்தில் டிப்ளோமா வரை கற்றிருப்பதோடு பண்ணிசையிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். தாய் தந்தை இருவரும் ஆசிரியராக இருந்தமையினால் இவர் ஐந்து வயது முதலே வாசிப்பு பழக்கத்தை தன்னில் ஏற்படுத்திக்கொண்டார். இவரின் தந்தை வ.இராசையா பிரபல சிறுவர் இலக்கியவாதியாக அடையாளம் காணப்பட்டார். அத்தோடு "தகவம்" இலக்கிய அமைப்பின் ஸ்தாபகர்களில் முக்கியமான ஒருவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தையின் நூல் அலுமாரி தனக்கு தமிழ், ஆங்கில வாசிப்பை அறிமுகப்படுத்தியதுடன் இலக்கிய சந்திப்புகள் வீட்டில் ஏற்படுத்திய தாக்கம், இவரை தரமான ஆங்கிலத்திரைப்படங்களுக்கு அழைத்துச் சென்று பார்க்கவைத்தமை மூலம் தனது இலக்கிய இரசனை வளர்ந்தது என்று கூறுகிறார். தனது பதின்ம வயதில் வானொலியின் ஊடாக எழுத்துலகில் பிரவேசித்த எழுத்தாளர் வசந்தி தயாபரன் தனது 21ஆவது வயதில் இலங்கை வங்கி மலரில் தனது கட்டுரையும் கவிதையும் வெளிவந்ததாக குறிப்பிடுகிறார். நீண்டதொரு இடைவெளியின் பின்னர் 2002ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் "புதிய முகம்" சிறுகதை வெளிவந்துள்ளது. டொமினிக் ஜீவாவின் ஊக்குவிப்பால் தொடர்ந்தும் சிறுகதைகளை எழுதத் தொடங்கியதாக கூறுகிறார். 2012ஆம் ஆண்டு "காலமாம் வனம்" சிறுகதைத் தொகுப்பு, நான்கு சிறுவர் இலக்கிய நூல்கள் ஆகியவை இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. அத்தோடு, சிறுவர்களுக்கான சிங்கள பாடத்துணை நூல் ஒன்றை சிங்கள மொழியிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத் திறனாய்வுகளை பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுத்து வடிவிலும் மேடைகளில் உரைவடிவிலும் வழங்கி வருகிறார். தமிழ்க் கதைஞர் வட்டம் அமைப்பின் செயலாளரான இவர் 2016ஆம் ஆண்டில் "தகவம் பரிசுக் கதைகள் 3" தொகுதியை வெளியிட்டுள்ளார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்டகாலமாக ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும் வசந்தி தயாபரன் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் சேவையாற்றி வருகிறார். இவரின் குடை நடை கடை நூலுக்கு குழந்தை இலக்கியத்திற்கான பதிவாளர் நாயகம் எஸ்.கமுத்துக்குமாரன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10,000 பொற்கிழியும் கிடைத்தது.

குறிப்பு : மேற்படி பதிவு வசந்தி தயாபரனின் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

வளங்கள்

  • நூலக எண்: 13183 பக்கங்கள் 06-07
  • நூலக எண்: 1030 பக்கங்கள் 40-41
  • நூலக எண்: 1033 பக்கங்கள் 38-39
  • நூலக எண்: 1389 பக்கங்கள் 37-40
  • நூலக எண்: 1778 பக்கங்கள் 36-37
  • நூலக எண்: 1886 பக்கங்கள் 263-265
  • நூலக எண்: 1778 பக்கங்கள் 36-37
  • நூலக எண்: 1987 பக்கங்கள் 58-63
  • நூலக எண்: 2870 பக்கங்கள் 34-36
  • நூலக எண்: 6110 பக்கங்கள் 27-31
  • நூலக எண்: 8168 பக்கங்கள் 15-16
  • நூலக எண்: 8585 பக்கங்கள் 107-111
  • நூலக எண்: 8834 பக்கங்கள் 12
  • நூலக எண்: 8841 பக்கங்கள் 45-49
  • நூலக எண்: 9840 பக்கங்கள் 14-15
  • நூலக எண்: 9853 பக்கங்கள் 18-19
  • நூலக எண்: 10198 பக்கங்கள் 52-55
  • நூலக எண்: 10384 பக்கங்கள் 205-206
  • நூலக எண்: 10384 பக்கங்கள் 205-206
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வசந்தி,_தயாபரன்&oldid=278504" இருந்து மீள்விக்கப்பட்டது