ஆளுமை:றூபி வலன்ரீனா, பிரான்சிஸ்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 14 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=றூபி வலன்ரீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றூபி வலன்ரீனா
தந்தை அன்ரனி சூசை
தாய் மேரி திரேஸ்
பிறப்பு 1959.08.26
இறப்பு -
ஊர் புளியந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றூபி வலன்ரீனா, பிரான்சிஸ் (1959.08.26) மட்டக்களப்பு, புளியந்தீவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அன்ரனி சூசை; தாய் மேரி திரேஸ். தனது ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கற்ற றூபி வலன்ரீனா, உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கற்கையினைக் கற்று முதல் தரத்தில் சித்தியடைந்தார். பட்டதாரி ஆசிரியராக பது பண்டாரவளை தமிழ் வித்தியாலயத்திலும், மட் புனித மிக்கேல் கல்லூரியிலும் கடமையாற்றினார். தற்பொழுது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இணைந்து விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார்.

1990ஆம் ஆண்டிலிருந்து கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் இவர் எழுதி வருகின்றார். மட்டக்களப்பு மறைமாநிலத்திலிருந்து வெளிவரும் வெட்டாப்பு பத்திரிகையில் 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட 40 கதைகள், குடும்ப நல்லுறவு (2015) என்னும் தலைப்பில் நூலுருப் பெற்றுள்ளன. இதைத்தவிர இவரால் எழுதப்பட்ட நிஜங்களின் வலி, கொள்ளி, தீர்மானம், இது முடிவல்ல, திருப்பலி வாழ்வில் தொடர்கிறது ஆகிய கதைகளும், மனிதம் மரணிப்பதில்லை, தலைப்பில்லாக் கவிதையாய் ஆகிய கவிதைகளும் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

2008ஆம் ஆண்டு கொழும்பு, ஈழத்துப் பூதந்தேவனார் கழகம் இவருக்கு செம்மொழி புலமையாளர் விருதை வழங்கிக் கௌரவித்தது. மட்டக்களப்பு கதிரவன் கலைகழகம் 2017ஆம் ஆண்டில் கலைஞர்களுக்கான கௌரவம் வழங்கியது.