ஆளுமை:கேமலதா, ஹதீபன்
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:54, 8 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கேமலதா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கேமலதா |
தந்தை | கனகலிங்கம் |
தாய் | மனோன்மணி |
பிறப்பு | 1983.12.11 |
இறப்பு | - |
ஊர் | சாவகச்சேரி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கேமலதா,ஹதீபன் (1983.12.11) யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகலிங்கம்; தாய் மனோன்மணி. தனது ஆரம்பக்கல்வியை சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். சிறுவர் எழுத்தாளரான கேமலதா ஹதீபன் 2011ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்தார்.
இவரின் ஆக்கங்கள் இலங்கையில் வெளிவரும் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளது. எடுத்தது, சுற்றுலா செல்வோமா, ஆ என்ன வெயில், கீச்.. கீச், பட்டு நரி, குண்டு மீனும் குட்டி மீனும் ஆகிய சிறுவர் நூல்களை இவர் எழுதியுள்ளார். மேலும் இவரின் சிறுவர் இலக்கியத்திற்காக இளம் படைப்பாளி இரா. உதயணன் இலக்கிய விருது 2016ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.