அப்பையா

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:42, 20 சூன் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை=நினைவு மலர்" to "வகை=நினைவு வெளியீடுகள்")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அப்பையா
426.JPG
நூலக எண் 426
ஆசிரியர் எஸ். பொ.
நூல் வகை நினைவு வெளியீடுகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அரசு வெளியீடு
வெளியீட்டாண்டு 1972
பக்கங்கள் 64

வாசிக்க

நூல்விபரம்

எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் தந்தையாரின் இழப்பின் பின் அவரைக் காவியநாயகனாகக் கொண்டு படைத்த காவியம் இது. வழமையான கல்வெட்டு மரபிலிருந்து விலகி மகனான தனக்கும் அப்பையாவென விழிக்கப்படும் தன் தந்தைக்கும் இடையே இருந்த அன்புத் தொடர்புகளையும் ஆசாபாசங்களையும், அகங்கனிந்து பாடுகின்றார். தந்தையின் வாழ்வைத் தனையனாக நின்று மனமுருகிப்பாடி அதையே தன் பிரிவுத் துயரைத்தீர்க்கும் வடிகாலாகக் காண்கிறார். பாரம்பரிய கல்வெட்டு மரபுமுறையின் மற்றொரு பரிமாணமாக இக்காவியம் மலர்ந்துள்ளது. இது 31ஆவது அரசு வெளியீடு.


பதிப்பு விபரம்
அப்பையா. எஸ்.பொன்னுத்துரை. கொழும்பு 13: அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1972. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளித் தெரு). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 * 12 சமீ.

-நூல் தேட்டம் (# 3538)

"https://noolaham.org/wiki/index.php?title=அப்பையா&oldid=229631" இருந்து மீள்விக்கப்பட்டது