பகுப்பு:வாகை

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:24, 8 சூன் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வாகை இதழ் 1981 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து காலாண்டு இதழாக நாவலர் வீதி, நாவாந்துறையில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக எழுத்தாளார் வி.ரி இளங்கோவன் திகழ்ந்தார். வாகை இலக்கிய வட்டத்தின் வெளியீடாக இந்த இதழ் வெளியானது. வாகை இலக்கிய வட்டத்தின் உறுப்பினர்களாக இருந்த கி.பவனானந்தன், ஞானரதன், சில்லையூர் செல்வராசன் இந்த இதழின் வருகையின் பின் நின்றார்கள். கலை இலக்கியம் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் , அரசியல் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது. சண்முகதாசனின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த இதழ் வெளியாகியது. இந்த இதழின் வருகைக்கு வி.ரி. இளங்கோவனுடன் எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் துணை நின்றார். முற்போக்கு எழுத்தாள தொண்டர்களால் இந்த இதழ் நேரடியாக கொண்டு சென்று இந்த இதழ் விற்பனை செய்ய பட்டது. சில விளம்பரங்களை மட்டும் கொண்டு இந்த இதழ் வெளியானது. 3 இதழ்கள் வரை வெளியான இந்த இதழ் மக்கள் காலை இலக்கிய பெருமன்றத்தின் ஆரம்பம் காரணமாகவும் தனி நபர் தனிப்பட்ட ரிதியாக ஒரு சஞ்சிகையை வெளியீடு செய்யக்கூடாது என்ற காரணத்தாலும் மக்கள் கலை இலக்கியத்தின் செயலாளராக வி.ரி. இளங்கோவன் செயலாற்றியமையாலும் இந்த இதழின் வருகை 3 இதழ் வருகையுடன் நின்றது.

"வாகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வாகை&oldid=228990" இருந்து மீள்விக்கப்பட்டது