பகுப்பு:மூலிகை (இதழ்)
மூலிகை இதழ் 1985 நவம்பர் 'சிகரம் ', புங்குடுதீவு -03ம் வட்டாரத்தில் இருந்து செய்த மருத்துவரும் எழுத்தாளருமான வி.ரி.இளங்கோவன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளியானது. இந்த இதழை மூலிகை மருத்துவ ஆராய்ச்சி சபை வெளியீடு செய்தது. மருத்துவம், குடும்ப மருத்துவம் , யுத்த கால மருத்துவ பாதுகாப்பு, மருத்துவ அறிவுறுத்தல்கள், உடல்நலம் பேணல் , யுத்தகால பாதுகாப்பு என்பவற்றை மக்களுக்கு வழங்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. இந்த இதழ் சுவர்ணா அச்சகத்தில் அச்சு செய்யப்பட்டது. 5000 பிரதிகள் அச்சு செய்யப்பட்டு சுகாதார தொண்டர்கள் மூலம் வீடு வீடாக சென்று இந்த இதழ் விநியோகம் செய்யப்பட்டது. மக்களிடையே இந்த இதழ் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. பா.சின்னத்தம்பி , வைத்தியர் குணரத்தினம், வைத்தியர் சிவானந்தம், த.துரைசிங்கம், சுகாதார உத்தியோகத்தர் ஜோதி வர்மன் , ஆசிரிய மணி கவிஞர் சி.க.நாகலிங்கம் இதன் வருகையில் உடனிருந்தார்கள். இந்த இதழின் ஆலோசனை குழுவில் கல்விப்பணிப்பாளர் த.துரைசிங்கம் , சுகாதார உத்தியோகத்தர் ஜோதி வர்மன், ஆசிரியமணி சி.சு.நாகலிங்கம் விளங்கினார்கள். வீட்டு வளவில் முருங்கை மரம் நடுதல், சுகாதார அறிவுறுத்தல்கள் இந்த இதழ் மூலம் வழங்கப்பட்டது. கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், மருத்துவ பாடல்கள் இதன் உள்ளடக்கத்தில் காணப்பட்டன. சில விளம்பரங்களை மட்டும் தாங்கி வெளியான இந்த இதழ் 5 இதழ்களை வெளியீடு செய்து யுத்த சூழல், அச்சக பிரச்சனைகள் , புங்குடு தீவில் இருந்து மக்கள் இடப்பெயர்வு காரணமாக தனது வருகையை நிறுத்தி கொண்டது.
"மூலிகை (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.