ஆளுமை:சுதர்சன், செல்லத்துரை
பெயர் | சுதர்சன் |
தந்தை | செல்லத்துரை |
தாய் | இலட்சுமி |
பிறப்பு | 1979.03.03 |
ஊர் | வசாவிளான் |
வகை | கவிஞர், விமர்சகர், ஆய்வாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுதர்சன், செல்லத்துரை (1979.03.03 - ) யாழ்ப்பாணம், வசாவிளானைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், விமர்சகர், ஆய்வாளர், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர். இவரது தந்தை செல்லத்துரை; தாய் இலட்சுமி. வசாவிளான் றோமன் கத்தோலிக்கக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புத்துறையாகப் பயின்று இளங்கலைமாணிப் பட்டம், முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றவர். சிவசம்புப் புலவர் மரபினரிடம் பழந்தமிழ்க் கல்வியை முறையாகப் பயின்றவர்.
இவர் குடியேற்றகால இலங்கையின் இலக்கிய ஆவணங்களைத் தேடியெடுத்துப் பதிப்பிப்பதிலும் ஆராய்வதிலும் ஈடுபட்டு வருபவர். தமிழின் மரபிலும் நவீனத்திலும் ஆர்வமுடைய இவர் காலனித்துவ கால இலக்கியம், எதிர்ப்பிலக்கியம், இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள், நவீன கவிதை, கோயில் இலக்கியம், பாவியல், இலக்கிய வரலாற்று எழுத்தியல் ஆகிய துறைகளில் அதிக ஈடுபாடுடையவர்.
மற்றுமொரு மாலை (2004), செம்புலம் (2006), யாப்பிலக்கணம் (2011) முதலிய இவரது நூல்கள். மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு (2016), சந்நிதியான் தெள்ளமுது (2016), கந்தவன மணிமாலை (2015), பறாளை விநாயகர் பள்ளு (2015), ஞானகுரு (2015), உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு: தேவபாகமும் மானுடபாகமும் (2014), சாவதும் புதுவதன்றே (2010), மறுமலர்ச்சிக் கவிதைகள் (2006), நடராஜ தரிசனம் (2006), என் தேசத்தில் நான் (2004), பாரதியார் பகவத் கீதை (2015) முதலிய பல நூல்களின் பதிப்பாசிரியர். இசைப்பாடல்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனக் குறிப்புக்கள், பத்திகளையும் எழுதியுள்ளார்.