அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:21, 4 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்
222.JPG
நூலக எண் 222
ஆசிரியர் தி. ஞானசேகரன்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மல்லிகைப் பந்தல்
வெளியீட்டாண்டு 1998
பக்கங்கள் 152

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல் விபரம்

யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவனைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி தி.ஞானசேகர ஐயர் மலையகத்தில் வைத்தியராகப் பணியாற்றியவர், ஞானம் என்ற கலை இலக்கிய சஞ்சிகையை நடத்தி வருபவர். இவரது கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி உருவ அமைதியிலும் தீவிர கவனம் செலுத்துபவர். உள்ளடக்கங்களுக்கேற்ற பொருத்தமான தலைப்புக்கள், உயிர்த்துடிப்புள்ள நடை, பொருத்தமான, சுவாரஸ்யமான கதைத் திருப்பங்கள், சிந்தனையைத் தூண்டும் முடிவுகள், பண்புநலனை வெளிப்படுத்தும் பாத்திர வார்ப்புகள், உவமைப் பிரயோகங்கள் என்பன இவரது கதைகளுக்குத் தனிச் சோபையை அளிப்பதாக பேராசிரியர் க.அருணாசலம் அவர்கள் விதந்து கூறியுள்ளார். ஞானசேகரகனின் 11 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன. இந்நூல் தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பாடநூலாகவும் வைக்கப்பட்டுள்ளது.


பதிப்பு விபரம்
அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும். தி.ஞானசேகரன். கொழும்பு 13: மல்லிகைப் பந்தல் வெளியீடு, 201-1/1, ஸ்ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, மே 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி). 152 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5 X12 சமீ.

-நூல் தேட்டம் (3551)