எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்
407.JPG
நூலக எண் 407
ஆசிரியர் நவஜோதி ஜோகரட்னம்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் xviii + 148

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல்விபரம்

லண்டனிலிருந்து ஒரு ஈழத்துப் பெண் படைப்பாளி எழுதி வெளிவரும் முதலாவது தமிழ் கவிதைத் தொகுப்பு என்ற வகையில் இந்நூல் புகலிடப் படைப்பிலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்கதாகும். ஜோகினி, மாஜிதா ஆகிய புனைபெயர்களில் எழுதிவரும் நவஜோதி யோகரட்ணம், யாழ்ப்பாணம் இளவாலை மகளிர் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தவர். தலவாக்கல்லை, பண்டாரவளை ஆகிய மலையகப் பாடசாலைகளில் கணித ஆசிரியையாகப் பணியாற்றியவர். அம்மக்களின் வாழ்வியல் துயரங்களால் ஈர்க்கப்பட்டு பல கவிதைகளின் வாயிலாக அதற்கு வடிகால் தேடிக்கொண்டவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் பிரான்சை நோக்கிப் புலம்பெயர்ந்த நவஜோதி பிரெஞ்சு மொழியிலும் சரளமாகப் பேசும் புலமை பெற்றவர். பின்னாளில் லண்டனைத் தனது நிரந்தர வதிவிடமாக்கிக் கொண்டு இன்று லண்டனில் ஊடகவியல்துறையில் தன் பாதங்களை ஆழப்பதித்து வருகின்றார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் மூலபுருஷர்களில் ஒருவரான அகஸ்தியரின் மகளான இவரிடமும் தந்தையின் படைப்பிலக்கிய ஆளுமையின் அம்சங்கள் ஆங்காங்கே பொதிந்துள்ளதை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் இனம்காட்டுகின்றன.


பதிப்பு விபரம்
எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன். நவஜோதி ஜோகரட்னம். லண்டன்: திருமதி நவஜோதி ஜோகரட்னம், 127, Long Elmes, Harrow, HA3 5LB, 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 13: ஈகுவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). xviii + 148 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 350., அளவு: 19.5 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 3422)