ஆளுமை:கலையரசு சொர்ணலிங்கம், லோட்டன் கனகரத்தினம்
பெயர் | கலையரசு சொர்ணலிங்கம் |
தந்தை | லோட்டன் கனகரத்தினம் |
பிறப்பு | 1889.03.30 |
இறப்பு | 1982.07.26 |
ஊர் | ஆனைக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கலையரசு சொர்ணலிங்கம், லோட்டன் கனகரத்தினம் (1889.03.30 - 1982.07.26) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர், நாடகக் கலைஞர். இவரது தந்தை லோட்டன் கனகரத்தினம். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் பயின்ற இவர், பாடசாலைக் காலங்களில் நாடக மேடையேற்றங்களுக்கான ஆர்வத்தைக் கொண்டிருந்தார். ஈழத்தில் நவீன நாடகத்தின் தந்தை என்னும் புகழைப் பெற்றுள்ளார். நாடகத்திற்கு அவ்வளவு அங்கீகாரம் கிடைத்திராத ஒரு கால கட்டத்தில் நாடக சங்கம் ஒன்றை நிறுவி தமிழ் நாடகங்களை மேடையேற்றிய முன்னோடி நாடக நடிகர். சில காலம் பள்ளி ஆசிரியராகக் கடமையாற்றிய கலையரசு சொர்ணலிங்கம் பின் அத்தொழிலைக் கைவிட்டு காப்புறுதித் தொழிலில் இறங்கினார்
1913 ஆம் ஆண்டு கொழும்பு ஆனந்தாக் கல்லூரி மண்டபத்தில் இலங்கை சுபேத விலாச சபாவின் தொடக்கவிழா இடம்பெற்றது. இவர் இச்சபாவின் வளர்ச்சியில் பங்கெடுத்தார். 1950களில் கலையரசு சொர்ணலிங்கம் கூத்தாகப் பாடி நடிப்பதை விடுத்து வசனம் பேசி நடிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இவர் யாழ் நாடக மன்றம் என்ற நாடகப்பள்ளி மூலம் பல நாடகங்களை நெறிப்படுத்தினார்.
"தான் எந்த வேடம் பூண்டாலும் தானே மற்றொருவர் உதவியின்றி தக்கவாறு வேடம் பூணுவதில் மிகவும் நிபுணர்," என்று பம்மல் சம்பந்த முதலியார் கலையரசு சொர்ணலிங்கத்தின் நடிப்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புராணக் கதைகளையும், இதிகாசங்களையும், வடமொழி நாடகங்களையும், ஆங்கிலத் தழுவல் நாடகங்களையும் அடிப்படையாகக் கொண்டு கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகங்கள் அமைந்தன
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 96-101
- நூலக எண்: 13844 பக்கங்கள் 43-47
- நூலக எண்: 1032 பக்கங்கள் 20-21