ஆளுமை:சேகுக்கண்டு கலீல்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:11, 23 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கலீல், எஸ்., ஆளுமை:சேகுக்கண்டு கலீல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சேகுக்கண்டு கலீல்
பிறப்பு 1956.11.18
ஊர் கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேகுக்கண்டு கலீல் (1956.11.18 - ) மூதூரைப் பிறப்பிடமாகவும் கம்பஹாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், பத்திரிகையாளர். இவர் மூதூர் தேசிய பாடசாலை, கம்பளை ஸாஸிரா தேசிய பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று வத்தளை அந்தோனியார் தேசிய பாடசாலையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மகரகம தொலைக்கல்வி நிறுவனத்தில் 'விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும்' கற்கைநெறியையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 'Diploma in Journalism' பாடநெறியையும் கற்றார். இவர் 1994 முதல் தினகரன் நிருபராகவும் எழுத்தாளனாலவும் பணிபுரிந்தார்

இவரது முதலாவது கவிதை 1972 இல் 'ஜும்ஆ' பத்திரிகையில் இடம் பெற்றது. தொடர்ந்து கலீல் கண்டு, மூதூர் கலீல் கண்டு ஆகிய புனைபெயர்களில் 15 கவிதைகள், 11 சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினபதி, சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன. இவர் தினகரன் பத்திரிகை நிருபராகவும் கடமையாற்றியவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கவியரங்குகளில் பங்குபற்றினார். இவர் கவரிமான் (சிறுகதைத் தொகுதி,1974), விட்டில்களா (கவிதைத் தொகுதி,1975) ஆகிய இரு நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 36-37