ஆளுமை:சிவகுமாரன், வேலாயுதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமாரன்
தந்தை வேலாயுதபிள்ளை
தாய் கனகம்மா
பிறப்பு 1957.04.01
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமாரன், வேலாயுதபிள்ளை (1957.04.01 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதபிள்ளை. இவர் யாழ்ப்பாணம் ஆனந்தாவிலும் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவர் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணி புரிகின்றார்.

தபேலா, உடுக்கு ஆகிய வாத்தியக் கருவிகளை இசை நாடகத்திற்கு வாசித்து வந்த இவர், நாடகத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார். இவரால் நாட்டார் வழக்கியற் கழகத்தின் சார்பில் உருவாக்கம் செய்யப்பட்ட காத்தவராயன், சத்யவான் சாவித்திரி, வள்ளி திருமணம் போன்ற நாடகங்கள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகிய ஊடகங்களில் ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட்டது. மேலும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றினூடாகத் தனது கலை அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக நிறுவனங்களான சனசமூக நிலையங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், ஆலய பரிபாலன சபைகள், கலை இலக்கியப் பேரவைகள் ஆகியவற்றுடன் இலங்கை இளைஞர் விவகார அமைச்சு, யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாண நாட்டார் வழக்கியற் கழகம், பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 181
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 161