ஆளுமை:ஏகாம்பரம், நா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஏகாம்பரம்
பிறப்பு 1844.03.23
இறப்பு 1876.10.27
ஊர் வல்வெட்டித்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏகாம்பரம், நா. (1844.03.23 - 1876.10.27) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவர் தமிழ் பயின்ற பின் வட்டுக்கோட்டையில் ஆங்கிலம் கற்றார். சென்னைக்குச் சென்று பிரவேசப் பரீட்சையிற் சித்தி பெற்றார். ஆங்கிலக் கல்வியை விடுத்துத் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்க விரும்பி இந்தியாவில் வித்துவான்களாக இருந்த திருவாளர்கள் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, இராஜகோபாலபிள்ளை, இராமலிங்கப்பிள்ளை என்பவர்களிடம் சிலகாலம் கற்றார். இவர் இந்தியாவிலிருந்த போது அட்டவதானப் பயிற்சி பெற்றதுடன், இலங்கையில் முதல் அட்டவதானம் செய்த பெரியவராவார். இவர் இலங்கையில் கொழும்பு, கண்டி, மட்டக்களப்பில் அட்டவதானம் செய்து காண்பித்துப் பரிசு பெற்றவர். வெண்பாவும் பாடியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 213-214
  • நூலக எண்: 963 பக்கங்கள் 51
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 28
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஏகாம்பரம்,_நா.&oldid=198126" இருந்து மீள்விக்கப்பட்டது