ஆளுமை:இரவி, அருணாசலம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:56, 18 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இரவி| தந்தை=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரவி
தந்தை அருணாசலம்
தாய் பரமேஸ்வரி
பிறப்பு
ஊர் அளவெட்டி
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரவி, அருணாசலம் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை அருணாசலம்; தாய் பரமேஸ்வரி. அளவெட்டி சீனங்கலட்டி ஞானோதயா வித்தியாசாலை, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி (1987-1988), கிளிநொச்சி இந்துக் கல்லூரி, (1989-1992), கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை (1992 - 1996) ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்.'புதுசு' (1980 - 1987 யாழ்ப்பாணம்), 'சரிநிகர்' (1991 - 1996 கொழும்பு),. 'புலம்'(1997 - 2001 இலண்டன்), . 'ஒரு பேப்பர்' (2004 - இற்றை வரை: இலண்டன்

வெளியிடட புத்தகங்கள்.'காலம் ஆகி வந்த கதை'(நெடுங்கதை) 'பாலைகள் நூறு'(சிறுகதைத் தொகுப்பு).'வீடு நெடும் தூரம்'(அரசியல் புதினம்) 'ஆயுதவரி'(குறுநாவல்கள்).'1958'(நெடுங்கதை)\\

.ஐ.பி.சி.தமிழ் வானொலி - நிகழ்ச்சித் தயாரிப்பாளர் (1997 - 2001) தமிழ் தொலைக்காட்சி இணையம் -TTN - நிகழ்ச்சித் தயாரிப்பாளர் (2001 - 2004) ஐ.பி.சி.தமிழ் வானொலி, தொலைக்காடசி - நிகழ்ச்சித் தயாரிப்பாளர் (2015 - இற்றை வரை

நாடக ஈடுபாடு: 1.நாடக அரங்கக் கல்லூரி, யாழ்ப்பாணம். 2. யாழ் பல்கலைக்கழக கலாசாரக்குழு. 3. அரங்காடிகள், கொழும்பு. 4. அரங்கத்தாடிகள், இலண்டன். (பதினைந்து நாடகங்களுக்கு மேல் நெறியாள்கை செய்தும் நடித்தும் இருக்கிறேன்; நூற்றுக்கு மேற்படட தடவை மேடை ஏறி உள்ளேன்) / சினிமாவில் நிறைந்த ஆர்வம்.
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இரவி,_அருணாசலம்&oldid=197583" இருந்து மீள்விக்கப்பட்டது