ஆளுமை:ஶ்ரீதர், பிச்சையப்பா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:46, 14 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஶ்ரீதர் |
தந்தை | பிச்சையப்பா |
பிறப்பு | 1963.07.20 |
இறப்பு | 2010.02.20 |
ஊர் | கொழும்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸ்ரீதர், பிச்சையப்பா (1963.07.20 - 2010.02.20) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர், நடிகர். இவரது தந்தை பிச்சையப்பா. இவர் ஏராளமான வானொலி, மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றி நடித்ததுடன் பாடல்களை இயற்றுதல், பாடுதல், ஓவியம் வரைதல், மொழிபெயர்ப்புச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றார்.
கு. ராமச்சந்திரனின் வானொலி நாடகத்தில் முதல் முதலில் நடித்தார். 1974 இல் கே. செல்வராசாவின் 'உறவுகள்' மேடைநாடகத்தில் நடித்தார். தொடர்ந்து சமூகசேவகி, எதிர்பாராதது போன்ற தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார். மேலும் பீ. ஏச். அப்துல் ஹமீத்தின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் பாடகனாக அறிமுகமாகி இலங்கை வானொலியில் இடம் பிடித்தார். தொலைக்காட்சியில் இவர் பாடிய பாடல்களில் தனபாலன் இயற்றிய 'ஓடை சலசலக்க' என்னும் பாடல் மிகவும் பிரபல்யமானது.
வளங்கள்
- நூலக எண்: 10302 பக்கங்கள் 85-86