ஆளுமை:ஸெயின், உதுமாலெப்பை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:06, 11 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஸெயின், யூ., ஆளுமை:ஸெயின், உதுமாலெப்பை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸெயின்
தந்தை இஸ்லாம் கண்டு உதுமாலெப்பை
தாய் இஸ்மாலெவ்வை பாத்திமா
பிறப்பு 1940.06.18
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸெயின், இஸ்லாம் கண்டு உதுமாலெப்பை (1940.06.18 - ) அம்பாறை, சம்பாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை இஸ்லாம் கண்டு உதுமாலெப்பை; தாய் இஸ்மாலெவ்வை பாத்திமா. மட்/ அ.மு.க. பாடசாலை, மட்/ அரசினர் சிரேஸ்ட பாடசாலை, மட்/ விபுலானந்த மகா வித்தியாலயம், அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கமான 'கன்னத்தில் முத்தம்' கிராமியச் சித்திரமாக சுதந்திரன் பத்திரிகையில் 1658 இல் பிரசுரமானது. தொடர்ந்து சம்மாந்துறைவன், புரட்சிமாறன், கலைவேள் மாறன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், உருவகக்கதைகள், வில்லுப்பாட்டு, சிறுகதைகள், நாடகங்கள், நூல்கள் என்பனவற்றை எழுதியுள்ளார். இனிக்கும் தமிழ் இலக்கியம் - தொகுதி 1,2 உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார். 113 நாடகங்களை எழுதியுள்ளார். கலைவேள் என்ற பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 86-89


வெளி இணைப்புக்கள்