ஆளுமை:ஹிதாயா, ரிஸ்வி
பெயர் | ஹிதாயா, ரிஸ்வி |
தந்தை | யூ. எல். ஏ. மஜீத் |
தாய் | ஸைனப் |
பிறப்பு | 1966.04.01 |
ஊர் | அம்பாறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஹிதாயா, எம். ஆர். எம். ரிஸ்வி (1966.04.01 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை யூ. எல். ஏ. மஜீத்; தாய் ஸைனப். இவர் கல்முனை மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரி, கல்எளிய அரபுக்கலாபீடம் ஆகியவற்றில் கல்வி பெற்றவர்.
இவரது கன்னிக் கவிதைகள் ஏப்ரல் 1. 1982 ஆம் திகதி 'மீண்டும்` என்னும் தலைப்பிலும், அதேதினம் சிந்தாமணி பத்திரிகையில் 'அன்னை' என்னும் தலைப்பிலும் பிரசுரமானது. அன்றிலிருந்து கலைமகள் ஹிதாயா, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா என்னும் புனைபெயர்களில் 1000 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 30 சிறுகதைகளையும், 100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் பல தேசிய பத்திரிகைகளிலும் இதழ்களிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் 'சமரசம்', அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் `தூண்டில்' ஆகிய இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன.
இவர் ரத்னதீபம் விருது, கலைமகள் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1739 பக்கங்கள் 151-155