ஆளுமை:ஶ்ரீகாந்தன், புண்ணியமூர்த்தி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:27, 4 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஶ்ரீகாந்தன் |
தந்தை | புண்ணியமூர்த்தி |
பிறப்பு | 1951.03.09 |
ஊர் | சித்தங்கேணி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீகாந்தன், புண்ணியமூர்த்தி (1951.03.09 - ) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர். இவரது தந்தை புண்ணியமூர்த்தி. 1995 ஆம் ஆண்டிலிருந்து வில்லிசை நிகழ்வுகளை வழங்கி வரும் இவர், தாமாகப் பாடல்கள் இயற்றி மெட்டமைத்து வழங்கி வருகின்றார். இவர் கற்பகன் வில்லிசைக் குழு என்ற பெயரில் புராண இதிகாச வரலாறுகளை வில்லிசையில் வெளிபடுத்தியுள்ளார். இவர் காரைநகர், சுழிபுரம், சங்கானை, சண்டிலிப்பாய், மல்லாகம், நவாலி, யாழ்ப்பாணம், அரியாலை, அளவெட்டி, கோண்டாவில், ஊர்காவற்துறை, கீரிமலை ஆகிய இடங்களில் வில்லிசையை நிகழ்த்தி வருகின்றார். இவரது ஆளுமையைக் கெளரவித்து 'வில்லிசை வித்தகன்' என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 82