ஆளுமை:வேதநாயகம், அன்ரனிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:14, 4 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேதநாயகம்
தந்தை அன்ரனிப்பிள்ளை
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதநாயகம், அன்ரனிப்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை அன்ரனிப்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் சென். பற்றிக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றினார். இவரின் படைப்புக்களில் சென். பற்றிக் கல்லூரியிலுள்ள தேவமாதா ஓவியம் நவ புலமைவாதப் பாணியில் வரையப்பட்டுள்ளது. இவரது மற்றொரு படைப்பு வண. பிதா லோங் அடிகளாரின் தலை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. இது மனித உடலின் சிறப்பியல்பான கூறுகளை தெரிந்தெடுத்து வரையப்பட்ட கோட்டுருவப்படமாகும். இதன் மூலம் “காட்டூனிஸ்ட்” கலையிலும் இவர், சமத்தர் என்பதை அறியமுடிகின்றது.

இவர் யாழ்ப்பாணம் கத்தோலிக்கப் பேராயரின் உதவியால் இத்தாலி சென்று ஓவியப் பயிற்சி பெற்றார். இவருக்கு “மின்சாரம்” என ஒரு பட்டப் பெயரும் உள்ளது. ஓவியர் அமிர்தநாதரின் தகவலின்படி இவர் பார்த்து வரைவதில் தேர்ந்த பயிற்சியுடையவராவார். இவர் 1957 இல் யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சித்திர சிற்பக்கண்காட்சியில் மிகத் தீவிரமாக பங்குபற்றியிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 15


வெளி இணைப்புக்கள்