ஆளுமை:லோகேந்திரலிங்கம், ஆர். என்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:35, 4 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லோகேந்திரலிங்கம்
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோகேந்திரலிங்கம், ஆர். என். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர். இவர் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலைகளைத் தனது படைப்புக்களில் வெளிக்கொண்டு வந்தார். இவர் இலங்கையில் எழுத்துலகில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 15 வருட காலத்தில் 'கீற்று', 'மாற்று' ஆகிய காலாண்டுச் சஞ்சிகைகளை வெளியிட்டதோடு கவிதை, சிறுகதை மற்றும் நவீன இலக்கியத் துறைகளில் ஈடுபட்டார். மலையன்பன், சத்தியன், புதுமைலோகன் என்ற புனைபெயர்களைக் கொண்டுள்ள இவர், 2003 ஆம் ஆண்டு "தூரமும் துயரமும்" என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டதுடன் 'கனடா உதயன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு வருகின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 446-447


வெளி இணைப்புக்கள்