ஆளுமை:யோகநாதன், தம்பிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:50, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகநாதன்
தந்தை தம்பிப்பிள்ளை
பிறப்பு 1945.11.15
ஊர் வட்டுக்கோட்டை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகநாதன், தம்பிப்பிள்ளை (1945.11.15 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை தம்பிப்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்திலும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

இவர் 1963 இல் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் 6 உயரம் 4 அகலம் கொண்ட முருகன் வள்ளி தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கும் ஓவியத்தை வரைந்து ஓவியத்துறையில் தடம் பதித்தார். மேலும் இவர் ஜெசீமா பட விற்பனை நிலையத்திற்குப் புதுமனைப் புகும் தெய்வீகப் படங்களைக் கண்ணாடிகளில் 1000 இற்கும் மேற்பட்டளவில் வரைந்துள்ளார். இவரது திறமைக்காக 2008 இல் கலாபூஷணம் விருதைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 256