ஆளுமை:மோகன்குமார், கே.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:35, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மோகன்குமார் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மோகன்குமார், கே. ஓர் திரைப்படக் கலைஞர். இவரது திரைப்படப் பிரவேசம் நெஞ்சுக்கு நீதி என்ற இலங்கைத் திரைப்படத்தின் மூலம் ஆரம்பமானது. இவர் நடன இயக்குனராகப் பணியாற்றிய திரைப்படங்கள் சுமார் நாற்பதுக்கு மேலாயினும், இவரைச் சிறந்த நடிகராக ஷர்மிளாவின் இதயராகம் என்ற திரைப்படமே அறிமுகப்படுத்தியது. இவர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ், சிங்களத் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்ததுடன் டப்பிங் துறையிலும் சிறந்து விளங்கினார். இவர் இயக்கிய முகங்கள் என்ற நாடகத்துக்கு 1992 இல் தேசிய தமிழ் நாடக விழாவில் முதற் பரிசும் பாராட்டும் கிடைத்துள்ளது. இவர் முகங்கள், அவன் மீண்டும் வருவான், உரிமை முழக்கம், வாடகைக்கு அறை, விடிவு இல்லாத முடிவு , தீர்ப்பு ஆகிய மேடைநாடகங்களில் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10571 பக்கங்கள் 157-160