ஆளுமை:முத்தையாபிள்ளை, முருகேசு

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:30, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்தையாப்பிள்ளை
தந்தை முருகேசு
தாய் முத்துப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்தையாப்பிள்ளை, முருகேசு புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை முருகேசு; தாய் முத்துப்பிள்ளை. இவர் 'மூனா மூனா என அறியப்பட்டார். ஆரம்பத்தில் புங்குடுதீவிலும் பின்பு இளவாலையிலும் கல்வி கற்ற இவர், தனது இளவயதில் தந்தையை இழந்து விட்டார்.

தனது 20 ஆவது வயதில் தொழில் தேடிக் கொழும்புக்குச் சென்ற இவர், ஆரம்பத்தில் 5 ஆம் குறுக்குத்தெருவில் ஒரு கடையில் காரியஸ்தராகக் கடமையாற்றிப் பின்னர் தனது தம்பியுடன் இணைந்து கூட்டு வியாபாரம் செய்தார். இவர்கள் தங்களது கடும் முயற்சியால் பெரும் பணக்காரர் ஆனார்கள்.

இவர் தனது விடாமுயற்சியால் கொழும்பில் பல நிலபுலங்களை வாங்கியதால் ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள உம்பிச்சிப் பிளேசில் உள்ள வீடுகளுக்குச் சொந்தக்காரரானார். இவர் தனது வர்த்தக நிலையங்களில் புங்குடுதீவு மக்களுக்கு வேலை வழங்கினார். கண்ணகை அம்மன் கோவிலைப் புனருத்தானம் செய்து தனது தாய் முத்துப்பிள்ளையின் பெயரால் அன்னதான மடம் அமைத்துத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்கினார். இவர் தான் வாழ்ந்த காலத்தில் நாட்டுக்கும் தான் பிறந்த புங்குடுதீவுக்கும் பல்வேறு சேவைகளைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 257