ஆளுமை:முத்துக்குமார், பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:19, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துக்குமார்
தந்தை பொன்னுத்துரை
பிறப்பு 1920.05.05
ஊர் பொன்னாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமார், பொன்னுத்துரை (1920.05.05 - ) யாழ்ப்பாணம், பொன்னாலை, சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னுத்துரை. இவர் 1950 இலிருந்து கலைத்துறையில் பிரவேசித்ததுடன் தமிழ் மரபு, சைவ சமயப் பாடத்திரட்டு, மாணவர் கட்டுரைகள், செந்தமிழ்த் தேன், இன்பத் தமிழ், தமிழ் இலக்கியம், சிலம்பின் சிறப்பு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கம்பராமாயண வகுப்புக்களையும் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் சிலப்பதிகார வகுப்புக்களையும் நடத்தியுள்ளார்.

இவர் 1956 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற முதலாவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியதோடு, 1964 - 1967 ஆம் ஆண்டு வரை இலங்கைக் கம்பன் கழகத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். இவரது சேவைக்காகச் சாகித்திய மண்டல இலக்கிய விருது கிடைத்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 44