ஆளுமை:மார்க்கண்டு, சோதிநாதர்
பெயர் | மார்க்கண்டு |
தந்தை | சோதிநாதர் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மார்க்கண்டு, சோதிநாதர் புங்குடுதீவு, வல்லன் மாவுதிடலில் பிறந்த சமயப் பெரியார். இவரது தந்தை சோதிநாதர். இவர் தனது சொந்தக் காணியில் புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயத்தை 1925 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இதன் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைத்துப் பின் சைவ பரிபாலன சபையிடம் கையளித்தார்.
இவரது முயற்சியால் வேலணை, சுருவில், மண்டைதீவு, அலுப்பாந்தி, கொழும்புத்துறை போன்ற பல துறைமுகங்களில் தோணிப்போக்குவரத்து நடைபெற்றது. இவர் ஆண்டுதோறும் கடல் மார்க்கமாக இந்தியாவிலுள்ள சிதம்பரத்திற்கு யாத்திரை சென்று வருவார். அத்துடன் வற்றாப்பளை கண்ணகியம்மன் கோவில், காரைதீவு கண்ணகி அம்மன் கோவில், கதிர்காமம் போன்ற பல கோவில்களுக்குப் பாத யாத்திரையை மேற்கொள்வார். இவர் கண்ணகியம்மன் கோவில் திருவிழாச் சபைத் தலைவர், வல்லன் இலுப்பண்டை நாச்சிமார் அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோவில் அறங்காவல் சபைத் தலைவர், வல்லன்பதி அருள்மிகு ஐயனார் கோவில் தர்மகத்தா ஆகிய பதவிகளை வகித்ததுடன் கண்ணகியம்மன் கோவில் திருவிழாக்களையும் முன்னின்று செய்வார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 138