ஆளுமை:மகேந்திரராஜா, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:14, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேந்திரராஜா
தந்தை ஆறுமுகம்
பிறப்பு
ஊர் வண்ணார்பண்ணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரராஜா, ஆறுமுகம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர், இந்தியாவின் பொறியியற் கல்லூரியில் உயர் கல்வியைப் பயின்றதோடு இலண்டன் புறுனல் தொழில்நுட்பக் கல்லூரி, ஜேர்மன் தொழில்நுட்பக் கல்வி நிலையம் ஆகியவற்றில் தொழில்நுட்பக் கல்வியைக் கற்றார். இவர் இலங்கையின் ஏயர் லங்கா நிறுவனத்திலும் மின்தறித் தொழிற்சாலையிலும் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1965 ஆம் ஆண்டு முதல் இலக்கியத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரது முதலாவது ஆக்கமான நாமும் நமது கலாச்சாரமும் ஜேர்மனில் வெளிவந்த 'தமிழருவிப் பத்திரிகையில் வெளியாகியது. இவர் இதுவரை சுமார் 60 வரையான கட்டுரைகள், 250 வரையான கவிதைகளை எழுதியுள்ளளார். இவரது முதலாவது கவிதையான கற்பு தமிழருவிப் பத்திரிகையில் வெளியானது.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 55-57
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 80-82